பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படம் வெளியீடு குறித்து படக்குழு இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படம் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன்பின் நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50% மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் RRR திரைப்படம் படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், RRR திரைப்படம் குழுவினர் இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து, அனைத்து திரையரங்குகளும் 100 சதவீதத்துடன் திறந்தால் மார்ச் 18, 2022 அன்று படத்தை வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையெனில் RRR திரைப்படம் ஏப்ரல் 28 அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் RRR என்பதாகும்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…