உக்ரைன் – ரஷ்யா போரில் அணு ஆயுதம்.? பிரதமர் மோடி, சீன அதிபர் கவலை.!
ரஷ்யா அணுஆயுதங்ளை பயன்படுத்துமோ என்ற கவலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். – சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ்.
ரஷ்யா , உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து 10 மாதங்களை கடந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. மேலும், தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் போராடுவோம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார். இதுகுறித்தும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான – சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், உக்ரைன் ரஷ்யா போரில், ரஷ்யா அணுஆயுதங்ளை பயன்படுத்துமோ என்ற கவலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர் என கூறியுள்ளனர்.
அணு ஆயுத போர் பற்றிய இந்திய பிரதமர் மற்றும் சீன பிரதமரின் கவலை என்பது, ரஷ்ய – உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார் . இதனால் அணு ஆயுத பயன்பாடு என்பது முற்றிலும் தவிர்க்கப்படும் சூழல் உருவாகும் எனவும், சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.