இன்று காலமானார் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் சக் யேகர்!
ஒலியை விட மிக வேகமாக சென்றவர் என்ற சாதனையை படைத்த 97 வயதுடைய அமரிக்க விமான பொறியாளர் சக் யேகர் அவர்கள் இன்று காலமானார்.
1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பிறந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற மேற்கு விர்ஜீனியா விமான பொறியாளர் தான் சக் யேகர். இவர் தனது 21 ஆவது வயதிலேயே விமானியாக பதவி உயர்வு பெற்று அமெரிக்க விமானப்படை கொண்டாடக்கூடிய விமானியாக மற்ற விமானங்களை சுட்டு வீழ்த்தி உயர்ந்தவர். ஒலியின் வேகத்தை விட வேகமான போர் விமானத்தில் பறந்து 1947 ஆம் ஆண்டு ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் எனும் வரலாற்று சாதனையை இவர் படைத்தார்.
இவரது சாதனையை தான் அமெரிக்காவில் விமான திட்டத்திற்கு வழிவகுக்க உதவியுள்ளது. இதுமட்டுமல்லாமல், விமான பொறியாளராக இருந்த இவர் விமானம் குறித்த பல்வேறு சோதனைகளை செய்து வெற்றி அடைந்துள்ளார். மேலும் பல்வேறு பெருமைகளுடன் வாழ்ந்து தனது வாழ்க்கையில் ஓய்ந்திருந்த இவருக்கு 97 வயது ஆகிறது.ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் எனும் வரலாற்று சாதனை படைத்த விமானபொறியாளர் சக் யேகர் இன்று காலமானார் என அவரது மனைவி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.