உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ்!
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் இயேசு பிறந்த தினமாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்ட்+மாஸ் என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்ப்பாக உள்ளது. இந்நாளில் மேலை நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். விரும்பியவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.
அன்றைய தினத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக் மற்றும் பலமான விருந்து என அசத்தலான நாளாக இருக்கும். இந்த நாளில் இயேசு பெருமானை நினைத்து, பாடல்களை பாடி மகிழ்வர். இயேசு பிறந்த வருடம் சரியாக தெரியாத காரணத்தால், கிமு 7 மற்றும் கிமு 2க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்காலம் என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி கொண்டாடுகின்றனர். முதன் முதலில் மேலைநாட்டு கிருஸ்தவர்கள் 4 ஆம் நூற்றாண்டில் இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
இதன் பிறகு இந்த நாளில் கிபி 800 ஆம் ஆண்டு சார்லிமேனி பேரரசனாக முடிசூட்டப்பட்டான். இதேபோன்று 855, 1066, 1377 ஆம் ஆண்டுகளிலும் மன்னர்கள் கிறிஸ்துமஸ் நாளில் முடிசூட்டப்பட்டனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்த பண்டிகை உலகம் முழுவதும் பிரபலம் அடைய தொடங்கியது. தற்போது இந்த பண்டிகையை மேலை நாடுகள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.