கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சென்னை சாந்தோம் சர்ச் :
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு வருடா வருடம் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை விளக்கும் பாடல்களும் இசைக்கப்படும்.
வேளாங்கண்ணி தேவாலயம் :
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து இயேசுவின் பிறப்பு தத்ரூபமான முறையில் அறிவிக்கப்படும். இதில் ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி நகரம் விழாக்கோலம் கொண்டு காணப்படும்.
பனிமயமாதா ஆலயம் :
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெரும். மேலும் இயேசுவின் பிறப்பினை உனர்த்தும் காட்சிகளும் இடம்பெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு நடத்துவார்கள்.
காலடிப்பேட்டை தூய பவுல் தேவாலயம் :
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை தூய பவுல் தேவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் இயேசு, குழந்தை வடிவத்தில் காட்சியளிப்பார். பின்னர் இயேசுவின் திருஉருவம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்படும். தொடர்ந்து நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள்.
திருச்சியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். அதனைதொடர்ந்து இயேசுபிரான் பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு நடத்துவார்கள்.
ஈரோட்டில் உள்ள புனித அமல அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபடுவார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். தொடர்ந்து குழந்தை இயேசு பிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெறும். இதேபோன்று மார்த்தாண்டம், குலசேகரம், கருங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.
இதேபோன்று கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, நெல்லை, தேனி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறும்.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் :
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும். பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபடுவார்கள்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும்.
பெங்களூருவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள்.
கேரள மாநிலம் :
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் கலந்து கொன்டு வழிபடுவார்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை விளக்கும் பாடல்கள் பாடப்படும் . கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
புதுடெல்லி :இதேபோன்று டெல்லி, மேற்குவங்கம், கோவா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.
source: dinasuvadu.com