கிறிஸ்துமஸ் பண்டிகையை உளுந்து லட்டோடு கொண்டாடுவோம்….!!!
கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் பல பலகாரங்கள் செய்து கொண்டாடி வருகிறோம். இந்த பலகாரங்கள் இனிமையாக இருப்பது போல, பண்டிகையும் இனிமையாக இருக்கும். இப்பொது கிறிஸ்துமஸ் பலகாரமான உளுந்து லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- உளுந்து – 500 கிலோ கிராம்
- சீனி – 500 கிலோ கிராம்
- திராட்சை – தேவைக்கேற்ப
- ஏலக்காய் – 5 அல்லது 6
- முந்திரி – தேவைக்கேற்ப
- நெய் – தேவையான அளவு
செய்முறை :
உளுந்தை வறுத்து, பின் ரவை போன்ற பதத்தில் அரைக்க வேண்டும். சீனியை உளுந்தோடு சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பின் திராட்சை, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சிறு சிறு துண்டுகளாக போட வேண்டும். பின் நெய்யை மிதமான சூட்டில் உருக்கி ஊற்றி, ஊற்றி லட்டு பிடிப்பதற்கு பதமாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். பின் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொது நமக்கு தேவையான உளுந்து லட்டு தயாராகி விட்டது.