சங்கக்கரா இடத்தை தட்டி பறித்த கிறிஸ் கெயில் !
நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய 44.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 212 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 213 ரன்கள் எடுத்து. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 41 பந்திற்கு 36 ரன்கள் எடுத்தார்.அதில் 5 பவுண்டரி , 1 சிக்ஸர் அடக்கும்.இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் நேற்றைய ஆட்டத்தின் 31-வது ரன்கள் எடுக்கும் போதே சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனை படைத்தார்.
இதற்கு முன் இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா இங்கிலாந்துக்கு எதிரான 41 போட்டிகளில் 1620 ரன்கள் எடுத்து இருந்தார்.ஆனால் கிறிஸ் கெயில் இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச 34 போட்டிகளில் 1632 ரன்கள் சேர்த்துள்ளார்.