வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க்கும் பொழுது அவர் ங்கள் பெற்றோருக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, உங்களுக்கு நல்லவராக தெரிகிறதா என்று பாருங்கள் என ஷாலு ஷம்மு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பரோட்டா சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமாகிய நடிகை தான் ஷாலு ஷம்மு. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்பொழுது அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஷாலு ஷம்மு வருங்கால கணவரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உங்களது வருங்கால கணவர் உங்கள் பெற்றோருக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் மனதிற்கு அவர் நல்லவராக தெரிகிறாரா என்பதை மட்டும் பாருங்கள். மேலும் அவர் உங்களுக்கு பணம் அதிகளவில் கொடுக்கக் கூடியவராக இருக்கவேண்டும் என்று விரும்பாமல், உங்கள் வாழ்க்கையை உணர்வுபர்வமாக முழுமையாக்க கூடியவராக இருப்பாரா என்பதை யோசித்து உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுங்கள் என கூறியுள்ளார்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…