ஜூனியர் செல்வராகவனுடன் சித்தப்பா தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.
இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2002 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர்.
அதன்பின், செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கர், ரிஷிகேஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில், செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார். சித்தப்பா தனுஷை பார்த்த ரிஷிகேஷ் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.