மறைந்த சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ,யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சித்ராவின் தந்தை புகார் அளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சித்ரா ,தனது சீரியலின் படப்பிடிப்பிற்காக வருங்கால கணவரான ஹேமந்த் ரவியுடன் சென்னை அருகிலுள்ள நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், ஜனவரியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஓட்டலின் அறையில் தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அதனை தொடர்ந்து சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து அவரது மரணம் கொலையா ?தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாவதாக சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த ஹேமந்துடன் நடத்திய விசாரணையில் அவரும் ,சித்ராவும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார் .
மேலும் சித்ராவின் தந்தை காமராஜ், அவரது தம்பி மற்றும் உறவினர்கள் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்திற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர். திருவான்மியூரை சேர்ந்த காமராஜர் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அளித்த புகாரில் தனது மகளின் மரணம் தொடர்பான உண்மையை கண்டுபிடிக்க வலியுறுத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து அவர் தங்கியிருந்த ஓட்டலின் ஊழியர்,நிறுவனர் உள்ளிட்ட அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சித்ராவின் மொபைலை சைபர் கிரைம் கைப்பற்றி மரணம் தொடர்பான ஏதேனும் தடயங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…