விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் சந்திக்காமல் இருந்த சித்ரா .! காரணம் இதுதான்.!

Default Image

விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் சித்ரா அவரை சந்திக்காததற்கான காரணம் தனது திருமணத்திற்கு அழைக்க நினைத்ததால் தான் சித்ரா கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சித்ராவின் ரசிகர்கள் அவரது இழப்பை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உள்ளனர் .மேலும் பலர் சித்ராவின் பழைய வீடியோக்களையும் , புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் அவருக்கு தளபதி விஜயை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தும் பார்க்காததற்கான காரணதாதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அதில் தளபதி விஜயை தனது திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று இருந்ததாகவும் ,அதனால் தான் வாய்ப்பு கிடைத்தும் அவரை பார்க்க செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும் அவருக்கு வயது கூடினாலும் இன்னும் இளமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இறுதி வரை அவர் தனது ஆசை நிறைவேறாமலே சென்று விட்டார் என்று பலரும் கண்கலங்கி வருகின்றனர்.இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்