சித்ரா மரண வழக்கு : கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு.!
சித்ராவின் மரண வழக்கு தொடர்பாக கணவர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் . சித்ராவின் மரணம் கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறயிருந்ததாக கூறப்பட்டது .மேலும் சித்ராவின் பெற்றோர்கள் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க கோரி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார் .மேலும் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நேற்றைய தினம் சித்ராவின் கணவரான ஹேமந்திடம் விசாரணை நடத்திய பின்னர் இன்று ஆஜாராகும்படி கூறிவிட்டு விடுவித்ததிருந்தனர் .
இந்த நிலையில் மறைந்த சித்ராவின் மரணம் குறித்த வழக்கில் கணவர் ஹேமந்த், சித்ராவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.