பொன்னம்பலம் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லனாக ஒரு காலகட்டத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம். கடைசியாக பொன்னம்பலம் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்தது கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு முந்திய காலகட்டத்தில் படவாய்ப்புகள் அமைந்தது போல் பெரிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உதவி செய்தனர்.
அவர்களை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து பொன்னம்பலம் வீடியோவை வெளிட்டுள்ளார்.
வீடியோவில் ” சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ரொம்ப நன்றி அண்ணன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த ரூ. 2 லட்சம் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தது. உயிருள்ள வரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. அந்த ஆண்டவர் உங்களை எப்பொழுதும் சிரஞ்சீவியாக வைத்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…