மாபெரும் சரித்திர படத்தை அடுத்து மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்கிறாரா சிரஞ்சிவி?!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை லூசிபர் பட இயக்குனரும், மலையாள முன்னணி நடிகருமான பிரித்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று என வருத்தப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025