#TamilCinema2019 : சினிமா உலகை உலுக்கிய #MeToo சர்ச்சை!
- பிரபல பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டான மீ டூ புகார் அளித்து இருந்தார்.
- சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னர் சினிமா பொதுவிழாக்களில் அதிகமாக கலந்துகொள்வதில்லை.
சின்மயி தமிழ் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்பட பாடலாகும். பின்னர் , பாய்ஸ், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டான மீ டூ புகார் அளித்து இருந்தார். சிறுவயதில் நடந்த பாலியல் சீண்டலையும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சினிமா நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை.
கடந்த மாதம் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார். இது குறித்து பாடகி சினமயி கருத்து தெரிவித்தார். அதில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நபர் பொதுவிழாக்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால் கவிஞர் வைரமுத்து கடந்த ஒரு வருடமாக அரசியல் நிகழ்வுகள், சினிமா நிகழ்வுகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் என அனைத்திலும் கலந்து கொள்கிறார். ஆனால், நான் தான், சினிமா நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்.’ என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சின்மயிக்கு இதன் பின்னர் படவாய்ப்புகள் ஏதுவும் வரவில்லை. கடைசியாக ’96’ படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் செய்திருந்தார். அதன் பின்னர் அண்மையில் வெளியான “ஹீரோ” படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு டப்பிங் செய்துள்ளார். இதற்காக உறுதுணையாக இருந்த ஹீரோ பட இயக்குனர் பி.எஸ் மித்ரனுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். இந்த வருடம் இந்த மீட்டு சம்பவம் பற்றி பல திரைப் பிரபலங்கள் தங்கள் கருத்தை கூறி வந்தனர். இந்த மீட்டு சர்ச்சையானது இந்திய சினிமாவில் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டது. பல அதிர்வலைகளை உண்டாக்கியது.