சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து – CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
சிறிய விபத்துக்கு பிறகு சிடி ஸ்கேன் செய்து பார்த்து தனது குழந்தை பருவத்தில் மண்டை ஓட்டிற்குள் நுழைந்துள்ள ஊசியைப் பார்த்து அதிர்ந்த சீனப்பெண்.
சீனாவை சேர்ந்த ஹெனன் எனும் மாகாணத்தில் வசிக்கக்கூடிய ஜூ எனும் பெண் தற்பொழுது 29 வயதுடைய இளம் பெண். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வாகனத்தில் செல்லும் போது சிறிய விபத்தில் மாட்டி உள்ளார், ஆனால் விபத்தின் போது எந்த ஒரு காயமும் இல்லை. தலையில் லேசான வலி இருந்ததால் உள்காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என சிடி ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்பொழுது தலையை சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவளது மூளைக்குள் 5 சென்டி மீட்டர் நீளமுடைய இரண்டு ஊசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் போது அவருக்கு இந்த ஊசிகள் நுழையவில்லை அதுவும் இல்லாமல் நுழைந்ததற்கு தளும்பும் எதுவுமே இல்லை, அப்படி இருக்கும் பொழுது இது எப்படி நடந்தது என்று ஆராய்ந்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ,இது ஒரு சிறு வயதில் மண்டை ஓடு கடினம் ஆவதற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளன அதனால் தான் அவருக்கும் இது எப்பொழுது நுழைக்கப்பட்டது என்பது குறித்து விவரம் தெரியவில்லை என நினைக்கிறோம் என கூறியுள்ளனர். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை காலங்கள் இந்த ஊசி வலி தரவில்லை என்பதற்கு கரணம் அது மண்டை ஓட்டில் எந்த ஒரு நரம்பு பகுதிகளையோ, முக்கியமான செயல்பாடு உள்ள பகுதிகளிலேயே அது இல்லை.
எனவேதான் அவர் ஒருபோதும் இது குறித்த வலியை உணராமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என அவரது வளர்ப்பு பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரித்த பொழுது ஜு தங்களது வீட்டுக்கு வருகையில் அவரது மண்டையில் இரண்டு கரும்புள்ளிகள் இருந்ததாக கூறி உள்ளார். இந்நிலையில் ஜூவின் தலையில் சிறு வயதில் யாரும் வேண்டும் என்றே பகை காரணமாக நுழைத்தார்களா? அல்லது தானாக ஏதும் நடந்துள்ளதா என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இது தற்பொழுது நுழைந்தது அல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை அகற்றுவதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.