விண்வெளி அதிசயமான ‘கருந்துளையின் மல்டி பேண்ட்’ புகைப்படத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானிகள்…!

Default Image

விண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்றான ‘கருந்துளையின்’ பல வளையங்கள்(மல்டி பேண்ட்)கொண்ட புகைப்படத்தை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா,பல வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் மர்ம முடிச்சாக இருந்து வந்து கருந்துளை(black hole)யினைக் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை முதல் முறையாக  2019 ஆம் ஆண்டு வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து,சீன விஞ்ஞானிகள் கருந்துளையினைச் சுற்றி ‘பல வளையங்கள்'(மல்டி பேண்ட்) இருக்கும் புகைப்படத்தினை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில்,கருந்துளையின் மையப் பகுதியானது கருப்பு நிறத்திலும்,அதனைச் சுற்றியுள்ள வளையமானது ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது.மேலும், மஞ்சள் நிற வெப்பமான வாயுக்களும் இடம் பெற்றுள்ளன.இந்த கருந்துளையினை, சீனாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான ‘தியான்மா’ படம் பிடித்துள்ளது.

கருந்துளையானது,பூமியிலிருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும்,சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு பெரியதாகவும் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்