விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி திரும்பி வந்துக்கொண்டிருக்கும் சீன ராக்கெட் இன்று பூமியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா, ‘தியான்காங்’ என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.இதற்காக சீனா,ஒரு மிகப்பெரிய விண்கலத்தை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி “லாங் மார்ச் 5 பி” என்ற 110 அடி உயரமுள்ள ராக்கெட் உடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பியது.
இந்நிலையில்,விண்வெளியின் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட ராக்கெட் தற்போது கட்டுப்பாட்டினை இழந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சீனா,”விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் லாங் மார்ச் 5 பி ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது முழுவதுமாக எரிந்து விடும்.அதனால்,பூமிக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.மேலும்,எரிந்த பாகங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் விழுந்துவிடும்”,என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும்,ராக்கெட் கீழே விழும்போது ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு சீனா பொறுப்பேற்று பணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்குமுன்,சீனாவின் தியாங்காங் -1 என்ற முதல் விண்வெளி நிலையம் 2018 ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பி பசிபிக் பெருங்கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…