கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட சீன பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்பொழுது உலகமே திக்குமுக்காடிய நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துவிட்டது. இந்நிலையில் பழைய நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சீனா திரும்பி வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் புறநகரில் உள்ள டைட்டாய்சன் தீம் பூங்காவில் நேற்று பனி விளக்குகள் மற்றும் பணி சிற்பங்களின் கண்காட்சி மண்டபம் நடைபெற்றுள்ளது. இந்த மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக எட்டு நாட்கள் சுற்றுலா விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் பயணிப்பார்கள் பொருளாதாரத்திற்கு சற்றே ஊக்கமளித்த வகையில் இருக்கும் என நினைத்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக தேசிய அளவிலான மாநில கவுன்சிலிங் பணி பாதுகாப்பு குழு மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…