உண்மையை உளறிய சீன அதிகாரி.! கொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவியது தெரியுமா.?
ஆரம்பகட்ட கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டதாக அந்நாட்டு சுகாதார ஆணையத்தின் அதிகாரி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தலைகீழ் புரட்டிப்போட்டது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அழைத்து வந்தார். பின்னர் இந்த வைரஸை சீனா ஆய்வு கூடத்தில் இருந்து தான் கசிந்தது என்று தொடர்ந்து குற்றசாட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அளிக்க இருந்த நிதியை நிறுத்திவைக்க போவதாக தெரிவித்தார். அதிபர் ட்ரம்ப் மட்டும் இல்லாமல் பல நாடுகளின் தலைவர் சீனாதான் வைரஸை பரப்பியது என்று குற்றசாட்டு எழுந்தது. ஆனால், சீனா தொடர்ந்து அதை மறுத்து வந்தத நிலையில், அமெரிக்கா உளவுத்துறை தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், ஆரம்பகட்ட கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டதாக சீன சுகாதார ஆணையத்தின் அதிகாரி கூறியிருக்கும் தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, யாரும் எதிர்பாராத வகையில், சீனாவிலுள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் ஆய்வாளர் யூ டெங்ஃபெங் கூறியுள்ளார். அந்த மாதிரிகளை மறைப்பதற்காக அப்படி செய்யவில்லை என்றும் உயிரியல் ஆய்வகத்தின் பாதுகாப்பிற்காக அவைகள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஆய்வகத்தில் மாதிரிகளை அதிகாரப்பூர்வமாக வைக்க முடியவில்லை. இதனால் சீனா பொதுசுகாதார சட்டத்தின்படி மாதிரிகள் அழிக்கவேண்டிருந்தது என்று குறிப்பிட்டுளார். அவரின் இந்த தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவின் குற்றசாட்டுக்கு வலு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.