கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாய்க்கு முகமூடி அணிந்த சீனர்கள்..!
- கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கொரோனா வைரசால் சீனர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பரவிவிட கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்நிலையில்நோயின் தாக்கம் அதிகமாக அறியப்படும் சீனா நாடுகளில் நோயின் பாதிப்பு தங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பரவிவிட கூடாது என்று சீன மக்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
அந்த நாடுகளில் செல்லப் பிராணிகளுக்கான மருத்துவமனையில் தற்போது செல்லப்பிராணிகளின் கூட்டம் தொடங்கிவிட்தாம், இந்த நிலையில் அங்கு நாய்களுக்கு விற்கப்படும் முகமூடிகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் உலக சுகாதார நிறுவனமான World Health Organization இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு மீது பரவியுள்ளது என கண்டறியவில்லை. அதனால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாத அச்சம் அடையை தேவையில்லை என்று ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.