28 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தவறுக்காக 1 கோடியே 12லட்சம் இழப்பீடு வழங்கிய சீன மருத்துவமனை!

Default Image

சீனாவின் ஹூவாய் எனும் மருத்துவமனையில் 28 ஆண்டுகளுக்கு முன்பதாக வேறொரு பெற்றோருக்கு தவறுதலாக குழந்தை ஒன்று மாற்றி கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனை 1 மில்லியன் யுவான் இழப்பீடாக வழங்கியுள்ளது.

சீனாவின் ஹீவாய் எனும் மருத்துவமனையில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பதாக பிறந்தவர் தான் யாவ் எனும் நபர். இவர் ஜியாங்சி எனும் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாயார் அவருக்கு ஒரு கலீரலை தானம் செய்ய முன்வந்துள்ளார், ஆனால் பெற்றோர்கள் இருவரது இரத்தவகையும் யாவுக்கு பொருந்துதல் பரிசோதனை செய்து பார்த்த பொழுது யாவின் பெற்றோர்கள் இவர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால் கைஃபெங் இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் யாவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து விசாரணை செய்ததில் குவோ வீ என்பவர் தான் யாவ் பெற்றோரின் மகன் எனவும், யாவ் பெற்றோரிடம் இவர் வளர்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் யாவுக்கு 80,000 யுவானும், யாவின் பெற்றோருக்கு 20,000 யுவானும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்