சீன அரசு ஒரு தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் மக்கள் தொகை சரிவை கண்டதாக சமீபத்தில் ஆய்வில் வெளியான தகவல்களுக்குப் பிறகு திருமணமான ஒரு தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் வரை இருக்கலாம் என்று சீனா இன்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. அந்த ஒப்புதல்படி சீனாவில் ஒரு பெற்றோர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவுகள் வெளியானது.
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தது எடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பல ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது. பின்னர் ஒரு குழந்தை திட்டத்தை அடுத்து மக்கள்தொகை கட்டுக்குள் வந்ததால் கடந்த 2016-ஆம் ஆண்டு கொள்கையை தளர்த்தியது.
அந்த கொள்கைப்படி குடும்பத்திற்கு 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த 2016- ஆம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. இந்நிலையில் குழந்தை பிறப்பு கொள்கையில் தளர்வு அறிவித்த பிறகும் மக்கள் தொகை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை இதனால், மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை குறைந்ததை அடுத்து குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…