உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக இருப்பது என்னவென்றால் அது கொரோனா வைரஸ் தான் , இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதிலும், கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள் எனக் கூறப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகமாக பாதித்துள்ளது. மேலும், பொருளாதாரமும் இங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதர பாதிப்பு வல்லரசு நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை அனைத்து நாடுகளிலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றால் அது பொருளாதாரம், அப்படி இருக்கையில், இந்த கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பெரிதாக பாதித்துள்ளது.
ஆனால், கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும், சீனா தற்போது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றோரு புறம் சீனா அனைத்துத் துறைகளிலும் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
உலக பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும் சீனா கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சீனாவில் கடந்த சில மாதமாக தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு 90 சதவீதம் இயங்கி வருவதால், ஜூன் மாதத்தில் சீனாவின் பொருளாதாரம் 3.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆனால், மார்ச் மாதத்தில் சீனாவின் பொருளாதார சதவீதம் -6.8 இருந்தது. கடந்த 3 மாதத்தில் 3.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் சீனா பதிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள 3 மாதத்திலே பொருளாதார வளர்ச்சியை கண்ட சீனா அடுத்த சில மாதங்களில் முழுமையான வளர்ச்சியை அடையும் என கூறப்படுகிறது.
சீனாவில், கொரோனா பாதிப்பு கடந்த நவம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், டிசம்பர் மாதம் சீனாவின் அனைத்து தொழில்களும் முழுவதும் முடங்கியது. சீனா விதித்த கடும் கட்டுப்பாடு காரணமாக தான் அங்கு பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
பின்னர், மார்ச் மாத இறுதியில் வர்த்தக மற்றும் உற்பத்தி சந்தை துவங்க தொடங்கியது. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பொறுத்தே உள்ளது. ஆனால், சமீபகாலமாக சீனா மீது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நம்பி இருப்பதால் உலக நாடுகள் வர்த்தக எல்லையை திறந்ததால் தான் சீன வர்த்தகச் சந்தையில் மீண்டும் முழுமையாக எழுந்து வரும். சமீபத்தில், சீனாவின் தலைநகரப் பெய்ஜிங்கில் 2-வது கொரோனா பாதிப்பு அலையை சீன மிக வேகமாகக் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…