ஒரு நாளைக்கு 2லிருந்து 3 மணி நேரம் மட்டும் உறங்கும் சீன மருத்துவர்கள்.! வாட்டி வதைக்கும் கொரோனா வைரஸ்.!

Default Image
  • சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து, கொண்டே வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளது. இதிலிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் கடும் முயற்சி செய்து வருகிறார்கள்.
  • சீனாவில் இரவு , பகலாக மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை காக்கும் மருத்துவர்கள் தூங்குவதற்கு நேரம் இல்லாமல் கிடைத்த நேரத்தில் தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற பல நகரங்களிலும் பரவி உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர். சீனாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் 24 மணி நேரமும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அயராத பாடுபட்டு வருகிறார்கள் மருத்துவர்கள். இதனை அவர்கள் தூங்குவதும் இல்லை சரியாக சாப்பிடுவதும் இல்லை.

இதனிடையே இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் ஓயாது உழைக்கும் மருத்துவர்கள் கிடைக்கும் நேரத்தில் ஒரு நாளைக்கு 2-ல் இருந்து 3- மணிநேரம் மட்டுமே தூங்கி வருகின்றனர். சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீன மக்களை பாதுகாக்க சீன மருத்துவர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். சீனாவின் ஊஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கரோனா வைரஸ் தாக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் இரவு , பகலாக மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை காக்கும் மருத்துவர்கள் தூங்குவதற்கு நேரம் இல்லாமல் கிடைத்த நேரத்தில் தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. மருத்துவமனை சுவரில் சாய்ந்த படியும், நாற்காலிகளில் அமர்ந்த படியும் மருத்துவர்கள் தூங்கி வரும் காட்சி புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்