சீன நிறுவனத்தின் சீனோஃபார்ம் கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளது – யுஏஇ!
சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமாகிய சீனோஃபார்ம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவில் தற்போது அதன் தீவிரமான நிலை சற்றே குறைந்து உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனவிற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு நாளுக்குநாள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக சீன அரசும் தனக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சீனோஃபார்ம் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால தொற்று மற்றும் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களிடம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் சீனா உருவாக்கியுள்ள தடுப்பூசி 100% செயல்திறனை காட்டுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.