உலகிலேயே மிக சிறிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள சீன நிறுவனம் …!
உலகிலேயே மிக சிறிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள சீன நிறுவனம்.
சீனாவை சேர்ந்த மிக பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் தான், WULING HONG GUANG. இந்த நிறுவனம் சமீபத்தில், டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில், நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
இந்த கார் டாடாவின் நானோ எலக்ட்ரிக் காரை விட மிக சிறியதாக தோற்றமளிக்க கூடியது. இது, 2 இருக்கைகளுடன், உயரம் 2,497 மில்லி மீட்டராகவும், அகலம் 1,526 மில்லி மீட்டராகவும் உள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் ‘நானோ இவி’ என பெயரிட்டுள்ளனர். இந்த கார் குறித்து அந்நிறுவனம் கூறுகையில், இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது உலகிலேயே சிறிய எலக்ட்ரிக் கார் என்ற பெயரை மட்டுமல்லாமல், மிக மலிவான எலக்ட்ரிக் கார் என்ற பெயரையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.