இஸ்ரேல் நாட்டுக்கான சீன தூதர் திடீர் மர்ம மரணம்.! போலீசார் தீவிர விசாரணை.!
இஸ்ரேல் நாட்டு சீனா தூதர் டு வொய் இஸ்ரேலில் அவர் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் சீனாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டவர் டு வொய். 58 வயதான டு வொய் கடந்த பிப்ரவரி மாதம் தான் தூதரக இஸ்ரேல் நாட்டில் நியமிக்கப்பட்டிக்கிருந்தார். அந்த மாதம் தான் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டு வொய் இதற்கு முன்னர் உக்ரன் நாட்டில் சீன தூதராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இஸ்ரேல் நாட்டில், டெல் அவிவ் நகரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர் வசித்து வந்த வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மர்ம மரணம் குறித்து இஸ்ரேல் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.