அழகுக்கு அழகு சேர்க்க நினைத்து அசிங்கமாய் மாறிய நடிகை

Default Image

சீனாவை சேர்ந்த அழகிய நடிகை காவ் லியு அவர்கள் தான் மேலும் அழகாக நினைத்து மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் மூக்கு மிகவும் அசிங்கமாக மாறியுள்ளது.

பொதுவாக நடிகைகள் திரையுலகிற்கு வரும்போதே தாங்கள் அழகாக இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கையுடன் தான் வருவார்கள். ஆனால் திரையுலகில் நுழைந்த பிறகு தங்களை விட அழகான பல நடிகர்களை பார்த்து அவர்களது ஒவ்வொரு அவயவங்களையும் அறுவை சிகிச்சை மூலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதேபோல சீனாவை சேர்ந்த பிரபல நடிகை ஆகிய 24 வயதுடைய காவ் லியு எனும் நடிகை சீனாவின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், இவர் பாடகியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே மிகவும் அழகாக இருக்கும் லியு மேலும் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசையில் ஜி ஜி ஜி குவான் கிளினிக் சேலம் குவாங்சோ நகரில் உள்ள கிளினிக் ஒன்றில் தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அங்கு இவருக்கு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது, ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்பு அழகாக மாறுவேன் என நினைத்த நடிகையின் வாழ்க்கை அப்படியே தலைகீழாகி விட்டது. ஏனென்றால் இவர் இருந்ததைவிட மிகவும் அசிங்கமாகி விட்டார். காரணம் அவரது மூக்கு பகுதியில் கருப்பு நிறமாக மாறி இவரது முகத்தின் அழகையே கெடுத்து விட்டது. அறுவை சிகிச்சையின்போது திசுக்கள் சேதம் அடைந்ததால் இவ்வாறு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் இதற்காக வேறொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் லியு கூறி வருகிறார். இருந்தாலும் தான் இருந்த நிலையிலேயே இருந்திருந்தால் கூட இவர் ம் மிக அழகாக இருந்து இருப்பார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்