குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லா இளம் தலைமுறை.! சீனாவில் சரியும் மக்கள் தொகை.!

China Population

2023 உலக மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியா 1.43 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகையுடன்  உலக மக்கள் தொகை தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சீனா தற்போது மக்கள் தொகையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது .

சீனாவில் 2023 இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, 140.69 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 20.8 லட்சம் குறைவாகும். 2022 இறுதியில்  141.17 கோடியாக மக்கள் தொகை இருந்தது குறிப்பிடதக்கது.

சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை பாதுகாப்போம்.! புதிய ஜனாதிபதி பேச்சு.!

சீனாவில் பிறப்பு விகிதமானது தொடர்ந்து குறைந்து வருகிறது. 2023இல் பிறப்பு விகிதமானது 90.2 லட்சமாக உள்ளது. அதாவது ஆயிரம் பேருக்கு 6.39 என்ற விகிதத்தில் பிறப்பு விகிதம் உள்ளது. அதுவே 2022இல் பிறப்பு விகிதமானது 95.6 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை தொடர் சரிவை சந்தித்து வரும் சூழலில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல், சீன அரசு , ஏற்கனவே அமலில் இருந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற கட்டுப்பாடை தளர்த்தி, தம்பதியினர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி என்ற சட்டத்தை இயற்றியது.  இருந்தாலும் தற்போது வரை பிறப்பு விகிதமானது குறைந்து கொண்டே தான் இருக்கிறது.

பிறப்பு விகிதங்கள் குறைவதால், வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதாகவும், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வேலைக்கு சென்று உயர்கல்வி பெறுவதாலும் பலர் குற்றம் சாட்டுகின்றனர். அத்தியாவசிய வேலைகள் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உள்ளது என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சியின் போக்கை மாற்றியமைப்பது தற்போதைய நிலைமையில் சாத்தியமற்றது என்று ஒரு சுதந்திர சீன மக்கள்தொகை ஆய்வாளரான ஹீ யாஃபு கருத்து கூறியுள்ளார். குழந்தை பெற்றுக்கொள்ள அரசு ஊக்குவித்தாலும், சீனாவின் பிறப்பு விகிதம் மாறவில்லை. ஏனெனில் இப்போதுள்ள இளைய தலைமுறையினர், பொதுவாக அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

உழைக்கும் மக்களின்  எண்ணிக்கை குறைந்து வருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் நிலவுவதால் குழந்தை வளர்ப்பு உதவித்தொகை, உலகளாவிய குழந்தை பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் நர்சரி பள்ளிகளில் சேரும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வீதத்தை அதிகரிப்பது உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்ற குரல்களும் சீனாவில் வலுத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter