10 ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் மக்கள் தொகை…!

Default Image

10 ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் மக்கள் தொகை.

சீனாவில் ஏழாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியனை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2020 முடிவுகளின்படி, சீனாவின் பிரதான மக்கள் தொகை 5.38% அதிகரித்து 1.41 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 5.84% அதிகரித்து 1.34 பில்லியனாக இருந்தது.

2020 கணக்கெடுப்பின்படி, சீனாவின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016 ல் பெய்ஜிங்கில்  ‘ஒரு குழந்தை கொள்கையை வாபஸ் பெற்ற போதிலும், 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி சரிவை கண்டுள்ளது.

15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களில் 894 மில்லியன் உள்ளனர். இது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6.79 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பிறப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை பெரும்பாலும் துல்லியமானது. சமீபத்திய ஆண்டுகளில் நாம் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது என புள்ளிவிவர நிபுணர் ஹுவாங் வென்ஷெங் தெரிவித்துள்ளார். ‘ஒரு குழந்தை கொள்கை’ தளர்த்தப்பட்ட போதிலும், சீனாவின் பிறப்பு விகிதம் 2017-ம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, நாம் கருவுறுதலை முழுமையாக தாராளமயமாக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு குழந்தைகளை பெற்று கொள்ள ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்குவது அவசியம். கர்ப்பம், பிரசவம், போன்றவற்றில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்