சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் சொந்த வசிப்பிடத்தை நெருங்கியது..!
உலகளவில் ஈர்க்கப்பட்ட சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் தற்போது அதன் சொந்த வாழிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் வசித்து வந்த 15 யானைகள் கடந்த ஜூன் மாதத்தில் அதன் வாழ்விடத்திலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சுற்றி திரிந்து வந்தது. இந்த யானைக்கூட்டம் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நடமாட தொடங்கியது. யானைக்கூட்டங்கள் ஒன்றாக சுற்றி திரிந்து பல விளைநிலங்களை சேதப்படுத்தவும் செய்தது.
மக்கள் வாழ்விடங்களில் புகுந்து பல சேட்டைகளும் செய்தது. இருந்தபோதிலும் யானைகளை பத்திரமாக அதன் வனப்பகுதிக்கு திருப்புவதற்கு வனத்துறை அதிகாரிகள் பல்வேறு முயச்சிகளை செய்து வந்தனர். யானைக்கூட்டங்கள் அங்கு அருகில் இருக்கும் கடைகளில் பழங்களை உண்பதும் அங்கு இருக்கும் இடங்களில் உல்லாசமாய் சுற்றித்திரிவதுமாக இருந்து வந்தது.
இந்த யானைகளில் ஒன்று வழிப்போக்கில் அதன் குட்டியையும் ஈன்றுள்ளது. இதனால் 16 யானைகளின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த 16 யானைகளும் நகருக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உறங்கும் காட்சியும், மூன்று யானைகளுக்கு மத்தியில் குட்டி யானை உள்ள காட்சியும் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த ஞாயிறு கிடைத்த தகவல்படி, இந்த யானைக்கூட்டங்கள் அதன் சொந்த வாழிடத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவைகள் யுவான்ஜியாங் ஆற்றை கடந்து தற்போது இதன் வசிப்பிடத்திற்கு 200 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக தகவல் வெளிவந்ததுள்ளது. இதனை அதன் வாழிடத்திற்கு அனுப்பும் முயற்சியில் சீன வனத்துறையினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.