சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் நல்ல பலன் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லான்சன் தொற்று நோய் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனோவேக் தடுப்பூசியை 550 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 96% பலன் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை முதல் கட்டமாக 1.5 மைக்ரோகிராம் அளவும், 3 மைக்ரோகிராம் அளவிலும் செலுத்தியுள்ளனர். இதில் 3 மைக்ரோகிராம் அளவு செலுத்தப்பட்டவர்களுக்கு 100% பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.5 மைக்ரோகிராம் அளவு செலுத்தப்பட்டவர்களுக்கு 97% பலன் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களுக்கு செலுத்திக்கொள்ளும் இடத்தில் சிறு வலி மட்டும் ஏற்படுவதாகவும், மிதமான விளைவுகள் மட்டுமே இதனால் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…