இந்திய வீரர்களை பின்வாங்க செய்ய, மின்காந்த அலைகளை, சீனா ஆயுதமாக பயன்படுத்தி உள்ளது.
லடாக் எல்லையில், கடந்த சில மாதங்காளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மோதலில் பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், மெதுமெதுவாக பதற்றநிலை தணிந்து வருகிறது.
இந்நிலையில், பெய்ஜிங்கில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் பேசிய சர்வதேச ஆய்வு நிபுணர், ஜின் கேன்ராங், லடாக் எல்லையில், இந்திய வீரர்களை பின்வாங்க செய்ய, மின்காந்த அலைகளை, சீனா ஆயுதமாக பயன்படுத்தியதாக கூறினார். பழைய ஒப்பந்தப்படி இருநாட்டு வீரர்களும், துப்பாக்கி பயன்படுத்த தடை உள்ளதால், சீனா ரகசியமாக இந்த ஆயுதத்தை உபயோகித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்காந்த அலையின் பாதிப்பு என்னவென்றால், இந்த மின் காந்த அலைகள் மனிதனுடைய சதையை ஊடுருவி, நீர்சத்து குறைத்துவிடும் தன்மை கொண்டவை என கூறிய அவர், வலியே இல்லாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்திய வீரர்காளுக்கு உடல் வெப்ப நிலையில் மாற்றம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சீன இந்த நுண் அலை ஆயுதத்தை தற்போது தான் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இதனை கடுமையாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு போலியான மற்றும் நகைசுவையான கூற்று என்றும் தெரிவித்துள்ளார். இது எல்லையை தாண்டி தொடரும் உளவியல் நடவடிக்கைகளில் ஒருபகுதி என்றும் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக மனித உடல், 8 பாரன்ஹீட் வெப்பநிலையில் இருக்கும் நிலையில், சீனா பயன்படுத்தியதாக கூறப்படும் மின்காந்த அலைகள், மனித உடலின் வெப்பநிலையை 130 பாரன்ஹீட் அளவிற்கு உயர்த்துவதாகவும், இதனால், உடலில் நீர்ச்சத்து வெற்றி போகும் அபாயம் உள்ளாதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…