ராணுவத்தை பாதியாக குறைக்கும் சீனா…நவீன தொழில்நூட்பத்துடன் விரிவாக்கம் செய்ய திட்டம்…!!
சீனா ராணுவப்படை வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
உலகிலேயே மிகப்பெரிய ராணுவப்படைய வைத்துள்ள நாடு சீனா.சீனா ராணுவத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கும் வலிமை மிகுந்த பெரிய ராணுவ படையாக திகழ்ந்து வருகின்றது.இந்நிலையில் சீனா அரசனது தரைப்படை ராணுவ வீரர்களை தவிர்த்து மற்ற படைகளில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
சீனா நாட்டின் கப்பல்படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.