விண்வெளிக்கு வெற்றிகரமாக செயற்கைக்கோளை அனுப்பிய சீனா.!
இன்று சீனா உள்ளூர் நாட்டிலே தயாரித்த பீடோ ஊடுருவல் செயற்கைக்கோள் (BeiDou Navigation Satellite System) வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தின் (Global Positioning System) போட்டியாக இருப்பதாகவும், ஒரு பெரிய விண்வெளி சக்தியாக மாறுவதற்கு மற்றொரு படி அமையும் என கூறப்படுகிறது.
குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் செயற்கைக்கோள், அமெரிக்க இராணுவத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் மிகவும் துல்லியமான ரேடியோ சிக்னல்களை அனுப்ப உதவுகின்றது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் மையத்திலிருந்து இன்று காலை லாங் மார்ச் -3 பி ஏவுகணை மூலம் பீடோ ஊடுருவல் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.
சீன மொழியில் பீடோ என்பதன் பொருள் “பிக் டிப்பர்”( Big Dipper) பீடோ அமைப்பின் இது 55 வது செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோள் முதலில் ஜூன் 16-ம் தேதி அன்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பின்னர் விண்ணில் செலுத்துவதற்கு முன் சோதனை செய்யப்பட்டது.
சோதனையில் தொழில்நுட்ப கோளாறு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த பீடோ செயற்கைக்கோள், பிற நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படும், இது உலகளாவிய பயனர்களுக்கு மிக துல்லியமான வழிசெலுத்தல் நேரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.