சீனா: தொழிற்சாலையில் தீ விபத்து! 6 பேர் பலி

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீன நாட்டில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் கடற்பாசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்டவுடன் வந்த மீட்புப்படையினர் அங்கிருந்த 6 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக அந்த தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.