பதுக்கி வைத்து பெரிய விலைக்கு விற்கும் சீனா – வெள்ளை மாளிகை அதிகாரி.!
மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்து உலக நாடுகளுக்கு மிக பெரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என வெள்ளை மளிகை அதிகாரி குற்றம்சாட்டு.
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில், இந்தியா, பிரேசில் உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸுக்கு மத்தியில் போதுமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் மருத்துவ உபகரணங்களை சீனா பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 18 மடங்கிற்கு அதிகமான முகக்கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதற்கு அமெரிக்காவிடம் தகுந்த சான்றுகள் உள்ளன. அந்த மருத்துவ உபகரணங்களை தற்போது சீனா மிக பெரிய விலையில் விற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.