சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு ? ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிகபட்சம் பதிவு
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 61 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் பதிவாகி உள்ள எண்ணிக்கை ஆகும்.
இதில் 41 பேர் சிஞ்சியாங்கிலும், 14 லியோனிங் மற்றும் இரண்டு ஜிலினிலும் உள்ளன, மீதமுள்ள நான்கு பாதிப்பு வெளிநாட்டில் இருந்து வந்தது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, சீனாவில் 46 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள உரும்கி என்ற நகரத்தில் 22 பேருக்கு கொரோனா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர். மேலும் 13 கொரோனா பாதிப்புகள் லியோனிங் மாகாணத்தில் உறுதி செய்யப்பட்டன.கொரோனா தொடங்கியதில் இருந்து சீனாவில் 83,891 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதகவும்,4,634 பேர் இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.