அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை சீனா ஏற்க மறுப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து ஜோ பைடனின் ஆதரவாளர்கள், கொண்டாடி வருகின்றனர். மேலும், பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு உலகளவில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் வாங் வென்பின், ஜோ பைடனின் வெற்றியை சீனா ஏற்க மறுப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், அமெரிக்க தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் சட்டங்களை பொறுத்தே வெளியாகும் நினைப்பதாகவும், அவரது வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை நீக்கி, நல்லுறவை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த அவர், சீனாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான கொள்கைகளை யாராலும் அசைக்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…