3 வயது குழந்தைகளிலிருந்து தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி..!
- சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசி 3 முதல் 17 வயதிற்குரியவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதியளித்துள்ளது.
- இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசியை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது. பின்னர் முதியோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இளைஞர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசியை 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பேசிய அத்தடுப்பூசியின் தயரிப்பு நிறுவனமான சீனோவேக் தலைவர் யின் வெய்டோங்க், இந்த தடுப்பூசியை 3 முதல் 17 வயதிற்குரியவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதியளித்துள்ளது.
இருந்தாலும், அவசர தேவைக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.