பலநாள் குற்றவாளி 17 வருடம் கழித்து அடர் வனத்தில் பிடிபட்ட சுவாரஸ்யம்!
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல சிறையில் இருந்து தப்பித்து 17 வருடங்கள் வனவாசம் போல் காட்டிலேயே இருந்து வந்த நபர் தற்போது அந்த குற்றவாளி போலீசார் வசம் பிடிபட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த சாங் சியாங் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெண்களையும் குழந்தைகளையும் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அதற்காக அவர் சீனா நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அந்த சிறையிலிருந்து சாங் சியாங் தப்பித்தார்.
அப்படி தப்பித்த சாங் சியாங் சீனாவில் உள்ள ஒரு காட்டில் ஒரு குகையில் வசித்து வந்துள்ளார். அந்த குகையை வீடாகவும், அருகில் உள்ள ஆற்றங்கரையில் தண்ணீர் எடுத்து காட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டும் 17 வருடமாக போலீசாரிடம் சிக்காமல் காட்டுவாசி போல வாழ்ந்து வந்துள்ளார்.
சீன போலீசார் வேறொரு தேடுதல் பணிக்காக ட்ரோன்களை வைத்து, காடுகளை படம்பிடித்து வந்துள்ளது. அப்போது சாங் சியாங் வசித்து வந்த ஆற்றங்கரையோரம், மனித நடமாட்டம் இருப்பதாக கண்டறிந்து அந்த இடத்திற்கு வனத்துறையினர் விரைந்தனர். அப்போது, சாங் சியாங் பிடிபட்டுள்ளார்.
பிடிபட்டவரை விசாரித்து தண்டனையை மீண்டும் உறுதி செய்து சிறையில் தள்ளினர் சீன காவல்துறையினர். பல நாள் குற்றவாளி 17 வருடம் கழித்து பிடிபட்டுவிட்டான்,