திபெத்தில் “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் ” – சீன அதிபர் ஜி ஜின்பிங் 

Default Image

திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் “என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

திபெத்தை 1959 ஆம் ஆண்டு சீனா கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் சீன ராணுவமே அங்கு எல்லை பணியில் ஈடுபட்டு வருகிறது.சீனாவின் கட்டுக்குள் திபெத் வந்த முதல் அவ்வபோது வன்முறை சம்பவங்கள்  நடைபெற்று வருகிறது. சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது .சீனாவை பொருத்தவரை திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி  என்றே கூறி வருகிறது. திபெத் சீனாவின் ஒரு அங்கம் என்றும் சீனா கூறிவருகிறது.

திபெத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார்.அவரது உரையில், திபெத் வளமான, கலாச்சார ரீதியாக முன்னேறிய அழகான பகுதியாக மாற்ற வேண்டும் என்று உரையில் தெரிவித்தார்.மேலும்  திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் “என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்