கொரோனா வைரஸ் பரவலை சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்-டிரம்ப் பேட்டி.!
வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த டிரம்ப், கொரோனா வைரஸ் பரவலை சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், ஆனால் தவறவிட்டனர் என தெரிவித்தார்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, தற்போது 200- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும், கொரோனாவால் 3,065,812 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 923,241 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211,662 ஆக உயர்ந்துள்ளது.
இதையெடுத்து, கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கூறி வருகின்றது. ஆனால், இதற்கு சீனா மறுத்து வருகிறது. சீனாவில் இருந்து தான் வைரஸ் பரவியுது என கண்டுபிடிக்கப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த டிரம்ப், கொரோனா வைரஸ் பரவலை சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், ஆனால் தவறவிட்டனர் என தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறோம் என கூறினார்.