கடல் சார் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது சீனா….

நம் அண்டை நாடான சீனா அருகில் உள்ள அனைத்து நாடுகளுடன் பகைமையை பாராட்டிவரும் நிலையில் தற்போது உலக நாடுகள் சீனாவுக்கு எதிரக ஓரணியில் திரள ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சீனா இந்த சம்பவத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
‘ஹையாங் 2 சி’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘லாங் மார்ச் 4 பி’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சீனா விண்ணுக்கு அனுப்பிய 3-வது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த புதிய செயற்கைக் கோள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா தனது கப்பல் ஏவுதளத்திலிருந்து ஒரே ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025