சீனா மூலமாக செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 15ஆம் தேதி அனுப்பப்பட்ட தியான்வென் -1 விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் வல்லரசு நாடுகள் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபடத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதுடன், தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.
இந்த விண்கலம் ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்டது, இந்த விண்கலம் 240 கிலோ எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள் நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 15-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் இது வெற்றிகரமாக தரையிறங்கியது என சீனா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்து தற்பொழுது அனுப்பி உள்ளது.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…