சீனாவில் வானிலை ஆராய வெற்றிகரமாக செலுத்தப்பட்ட புதிய செயற்கைகோள்..!
சீனாவில் வானிலை மற்றும் கடல் வெப்பநிலை பற்றி ஆராய புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
இன்று காலை சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜுகுவான் விண்வெளி ஆய்வுகூடத்திலிருந்து வானிலை அறிவதற்காக செயற்கைகோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. எட்டு ஆண்டு ஆயுட்காலம் உடைய இந்த செயற்கைக்கோள் 11 செயற்கை உணர்திறன் கருவிகள் உடைய எப்.ஒய். -3இ செயற்கைக்கோள்.
இந்த வானிலை ஆய்வு செயற்கைக்கோள் மூலமாக சீனாவில் சுற்றுசூழல், ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றை மிக துல்லியமாக அறிந்துகொள்ளமுடியும். மேலும், உலகளவில் கடல் வெப்பநிலை, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுசூழல் மாசுபாடு, பனிப்பொழிவு ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.