கொரோனாவிற்கு இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துள்ள சீனா

Default Image

கொரோனா வைரசால் உலகம் முழுவதும்  பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரசால் 2,035,773 பேர் பாதிக்கப்பட்டும் , 130,802 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவிற்கு சீனா சிகிச்சை அளிக்க பிளாஸ்மா தெரப்பி முறையை கையிலெடுத்தது ஆனால் கொரோனாவை  விரட்ட அது மட்டும் போதாது என எண்ணி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.
சீனா இரண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக குறைப்படுகிறதோ அதே உஹான் நகரில்  உள்ள உயிரியல் ஆய்வுகளை அதற்கான தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெய்ஜிங்கில் சேர்ந்த நாஸ்டாக் லிஸ்டட் நோவாக் பயோடெக் என்ற குழு கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அவற்றை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில் அங்கு மீண்டும்  கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலைமைக்கு  சீனா தள்ளப்பட்டுள்ளது.
அதிக பாதிக்கப்பட்ட அமெரிக்கா இத்தாலி போன்ற நாடுகளின் நிலையும் இதேதான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலைமைக்கு   தள்ளப்பட்டுள்ளது.ஆனால் சீனாவுக்கு சற்று கூடுதல் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் ஏன்.? என்றால் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான்.சீனா பரிசோதனை கருவிகளை உலகின் பல நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.
தமிழகமும் ரேபிட் டெஸ்ட்  கருவிகளை சீனாவிடம்  தான் ஆர்டர் செய்து உள்ளது. இந்நிலையில் சீன கொரோனாவிற்கு தடுப்பு மருந்து வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டால் பல நாடுகள் சீனாவின் தயவை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
கொரோனா வைரசால் அமெரிக்கா உள்ளிட்ட  பல   நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது. தடுப்பு மருந்து மூலம் சீனாவின் வர்த்தகம் மேம்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்