கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவை குறிவைக்கும் புதிய நோய் தொற்று!
கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவை தாக்கும் புதிய நோய் தொற்று.
இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதலில், சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு புதிய நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக காய்ச்சலை பரப்பும் வைரஸ் குறித்து சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த வைரஸானது, பன்றிகளின் மூலம் பரவக் கூடிய ஒரு வைரஸ் ஆகும். பன்றிகளுக்கு மத்தியில் வேலை செய்பவர்கள் இந்த வைரஸ் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளனர்.