சீனா தடுப்பூசிகளை சர்வதேச பயன்பாட்டிற்கு கொண்டு வர WHO உடன் பேச்சுவார்த்தை .!
சீனா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பால் மதிப்பீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அவை சர்வதேச பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு படியாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி இன்று தெரிவித்தார்.
சீனாவில் லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது இது நிபுணர்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது.
மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான WHO இன் ஒருங்கிணைப்பாளரான சோகோரோ எஸ்கலேட் காணொளி கட்சி மூலம், சீனா WHO உடன் தன் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடந்ததாக கூறினார்.